சீன ஊடகக் குழுமம், இத்தாலி பண்பாட்டு அமைச்சகம், இத்தாலி மனித நாகரிக அருங்காட்சியகம், ரோம் நுண்கலை கல்லூரி, இத்தாலி கால்பந்து சங்கம் முதலியவை ஏற்பாடு செய்த “சீன-இத்தாலி தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 55ஆவது ஆண்டு நிறைவுக்கான சிறப்புக் கலை கண்காட்சி”ஜுன் 25ஆம் நாள் இத்தாலியில் துவங்கியது.
சீனாவின் புகழ்பெற்ற கை எழுத்துக் கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள், பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பிரதிநிதித்துவம் வாய்ந்த மரபுரிமையாளர்கள், நுண்கலை கலைஞர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரைச் சேர்ந்த 200க்கும் மேலான சிறந்த படைப்புகளும், இத்தாலி மனித நாகரிக அருங்காட்சியகத்தைச் சேர்ந்த 100க்கும் மேலான கலைப் பொருட்களும் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.