ஜப்பானின் டோக்கியோ மின்சாரத் தொழில் நிறுவனம், ஜுன் 12ஆம் நாள் முதல், ஃபுகுஷிமா அணு கழிவு நீரை கடலில் வெளியேற்றும் வசதியை சோதனை முறையில் இயங்கத் தொடங்கியது.
ஜுன் இறுதிக்குள் கழிவு நீர் வெளியேற்றத்துக்கான அனைத்து ஆயத்தப் பணிகளையும், ஜப்பான் அரசு நிறைவேற்றும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில்,
ஐ.நாவின் கடல் சார்ந்த சட்டத்தில், கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பற்றிய கடமைகளை ஜப்பானின் இச்செயல் மீறியுள்ளது என்று தெரிவித்தார்.
அணு கழிவு நீரை கடலில் வெளியேற்றுவது, பசிபிக் மாக்கடல் நாடுகளின் உயிரினச் சூழல், உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி, ஜப்பான் அரசு, அறிவியல் சான்றுகளையும் தரவுகளையும் இன்னும் முன்வைக்கவில்லை என்றும் வான் வென்பின் சுட்டிக்காட்டினார்.
