சீன-பிரேசில் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வழி தொடர்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீயும்,பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியெராவும் தொலைபேசி மூலம் 28ஆம் நாள்  தொடர்பு கொண்டனர்.

அப்போது வாங்யீ கூறுகையில், சீன-பிரேசில் உறவு வரலாற்றில் மிக அருமையான காலகட்டத்தில் நுழைந்துள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரேசில் அரசுத் தலைவர் லூலா ஆகிய இருவரும் வலுவடைந்த கூட்டு நம்பிக்கையையும் நட்புறவையும் உருவாக்கி, இரு தரப்புகளின் மனித குலப் பொதுச் சமூக கட்டுமானத்திற்கு நெடுநோக்கு ரீதியில் வழிகாட்டியுள்ளனர். பிரசேலுடன் இணைந்து, நெடுநோக்கு கூட்டு நம்பிக்கையை வலுப்படுத்தி,  உறுதியாக ஒன்றுக்கு ஒன்று ஆதரவளித்து, இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான முக்கிய  ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, இரு நாடுகளின் பல்வேறு துறைசார் பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்க வேண்டும் என்றார்.

மவுரோ வியெரா கூறுகையில், தற்போதைய சர்வதேச வர்த்தகம் கடினமான நிலையில் உள்ளது. அதோடு, பல தரப்புவாதம் கடும் அறைகூவலை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் பிரிக்ஸ் நாடுகள் நெருக்கமான ஒத்துழைப்புகளையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். சீனா உள்ளிட்ட பல தரப்புகளுடன் இணைந்து, தொடர்புகளை வலுப்படுத்தி, பல தரப்பு வர்த்தக அமைப்புமுறைக்கு ஆதரவளித்து, உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தை விரைவுபடுத்துவதை பிரேசில் எதிர்பார்ப்பதாக வியெரா தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author