ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு பற்றிய 2வது செய்தியாளர் கூட்டம் ஆகஸ்டு 29ஆம் நாள் முற்பகல் நடைபெற்றது.
அமைதியான வளர்ச்சியில் ஊன்றி நிற்பது, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றுவது ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் மா சாவ்ஷு கூறுகையில், சீனா முன்மொழிந்த மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கம் என்பது, சர்வதேச பொதுக் கருத்தாக மாறியுள்ளது.
இது, கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக ஐ.நா பொதுப் பேரவையின் தீர்மானம் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் கூட்டத்தின் அறிக்கையில் இது 8 முறைகளாக சேர்க்கப்பட்டது. அதன் மையக் கருப்பொருள், எதிர்காலம் குறித்த உடன்படிக்கை என்னும் ஐ.நாவின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.