சீனர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இடையேயான பயணத்துக்கு வசதி வழங்க சீனா தொடர்ந்து முயற்சியை எடுக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் 27ஆம் நாள் புதன்கிழமை தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டின் இறுதி முதல் தற்போது வரை, 38 நாடுகளின் மக்கள் விசா இன்றி சீனாவிற்குள் பயணிக்கலாம் என்று சீனா அடுத்தடுத்து அறிவித்தது.
தற்போது, சீனா மொத்தம் 25 நாடுகளுடன் இரு தரப்பு விசா இல்லாத நுழைவுக் கொள்கையை செயல்படுத்தியுள்ளது.
அதேவேளையில், விசா விண்ணப்ப படிவங்களை எளிதாக்குதல், விசாவுக்கான கால முன்பதிவை நீக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.