டிக் டாக் செயலி மீதான தடையை நீக்க எந்தத் திட்டமும் இல்லை, பரிந்துரையும் வரவில்லை என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில், 2020ம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குதலில் இந்தியா – சீனா ராணுவம் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஆப்பிள் மற்றும் கூகிள் அந்த செயலிகளை அகற்றின. தற்போது இருதரப்புக்கிடையே நல்லுறவு நிலவி வருவதால் டிக்-டாக் செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியானது.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பம், தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை. இதன் மீதான தடையை நீக்க இதுவரை எந்த பரிந்துரையும் வரவில்லை.