பூமியை துல்லியமாக புகைப்படம் எடுத்த லேண்டர்!

Estimated read time 1 min read

அமெரிக்காவை தளமாகக் கொண்ட தனியார் நிறுவனம் நிலவுக்கு அனுப்பிய லேண்டர் பூமியை துல்லியமாக புகைப்படம் எடுத்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட Intuitive Machines என்ற தனியார் நிறுவனம் கடந்த 15 ஆம் தேதி மூன் லேண்டரை விண்ணில் ஏவியது.

இந்த லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கினால் நிலவில் தரையிறக்கும் முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை Intuitive Machines பெறும்.

இந்நிலையில் Intuitive Machines அனுப்பிய லேண்டர் பூமியை படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இதை Intuitive Machines நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அந்த புகைப்படங்களை பகிர்ந்த்துள்ளது.

Intuitive Machines வெளியிட்டுள்ள பதிவில், ஃபால்கன் 9 ராக்கெட்டில் இருந்து பிரிந்த லேண்டர் முதல் புகைப்பபடத்தை எடுத்து அனுப்பியது. இந்த புகைப் படங்களில், நோவா-சி எனப்படும் விண்கலமும் பின்னணியில் பூமியுடன் உள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ” நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து Intuitive Machines விண்கலத்தை ஏவியது குறிப்பிடத்தக்கது. “Intuitive Machines அதன் முதல் IM-1 பணிப் படங்களை பிப்ரவரி 16, 2024 அன்று பூமிக்கு வெற்றிகரமாக அனுப்பியது.

நாசாவின் உதவியின் கீழ் சந்திரப் பயணத்தில் ராக்கெட் இரண்டாவது கட்டத்தில் இருந்து பிரிந்த சிறிது நேரத்திலேயே படங்கள் எடுக்கப்பட்டன” என பதிவிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author