மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி விழா

மதுரை, ஜன 5 உலகில் எல்லா உயிர்களுக்கும் படி அளக்கும் விழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பரங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி வெளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அஷ்டமி தினத்தன்று பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் தனித்தனியாக சப்பரத்தில் எழுந்தருளி நான்கு வெளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் சித்திரை, மாசி வீதிகளில் வலம் வருவது வழக்கம். நகரின் வெளியே உள்ளவர்கள் சுவாமியை தரிசிக்கும் வகையில் மார்கழி மாதம் அஷ்டமி சப்பரத்தில் வெளிவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட
பெரிய சப்பரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையும் சிறிய சப்பரத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். அங்கு சுவாமி, அம்மனுக்கு விசேஷ அலங்காரத்துடன் பூஜை செய்யப்பட்டு அஷ்டமி சப்பரங்கள் கிளம்பின.

கீழவெளி தெற்கு வெளிவீதி, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, நாயக்கர் புதுத்தெரு, கீழமாரட் வீதி, காமராஜர் ரோடு வழியாக மீண்டும் கீழமாசி வீதி தேரடி பகுதிக்கு வந்தடைந்தது.


அம்மன் சப்பரத்தை பெண்களும் சுவாமி சப்பரத்தை ஆண்களும் இழுத்து வந்தனர். இதையொட்டி வெளிவீதியில் பக்தர்களின் கூட்டம் அதிகாலையில் இருந்தே காணப்பட்டது.

மேலும் அம்மனும் சுவாமியும் அஷ்டமி சப்பரத்தில் வந்தபோது பக்தர்கள் சுவாமி அனைத்து ஜீவராசிகளுக்கு படியளக்கும் நிகழ்ச்சியை விளக்கும் விதமாக படியளக்க அனைத்து உயிர்களுக்கும் ரோட்டில் அரிசி தூவப்பட்டது. தூவப்பட்ட அரிசியை பூஜை அறையில் வைக்க பெண்கள் போட்டிபோட்டுக் கொண்டு வீட்டிற்கு
எடுத்துச் சென்றனர்.

சிவபெருமான் புறப்பட்டார். அப்போது பார்வதி தேவி சிவனை சோதிக்க நினைத்தார். அதன்படி ஒரு சிறிய பெட்டியில் எறும்பு ஒன்றை அடைத்து வைத்தார். இறைவன் அனைத்து உயிர்களுக்கும் உணவு அளித்த திருப்தியில் இருந்தார்.

அப்போது பார்வதி அவரிடம் நீங்கள் அனைத்து உயிர்களுக்கும் படி அளந்து வீட்டீர்கள். ஆனால் ஒரு உயிருக்கு மட்டும் என்று அடைக்கப்பட்டிருந்த எறும்பு அரிசி ஒன்றை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதனை நினைவுபடுத்தும் வகையில் மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பரத் திருவிழா நடைபெற்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author