டோக்கியோ விசாரணை துவங்கிய 80ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் புகைப்படக் கண்காட்சி, 26ஆம் நாள் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் தொடங்கியது.
ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபு சோங் கூறுகையில், டோக்கியோ விசாரணை, போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கை வலுப்படுத்தி, சர்வதேச நேர்மையையும் நீதியையும் பாதுகாத்துள்ளது என்றும், இது அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தார்.
கண்டிப்பான நடைமுறைகள் மற்றும் உறுதியான ஆதாரங்களின் மூலம், டோக்கியோ விசாரணை ஜப்பானின் ஆக்கிரமிப்புக் குற்றங்களை நேர்மையான முறையில் விசாரணையை செய்தது என்றும், 80 ஆண்டுகளுக்குப் பிறகு இதை மீளாய்வு செய்வது, வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு புதிய இராணுவவாதத்தை தடுக்கவும், ஆக்கிரமிப்பு சக்திகள் மீண்டும் உருவாவதை எதிர்க்கவும் வேண்டும் என்றும், சீனா, ரஷியா, வடகொரியா ஆகியவற்றைச் சேர்ந்த விருந்தினர்கள் தெரிவித்தனர்.
