வங்கக் கடலில் தீவிரப் புயலாக நிலைகொண்டுள்ள அர்னாப் புயல், மெதுவாக கரையை நோக்கி நகரும் நிலையில் ஆந்திராவின் விசாகப்பட்டினம், காக்கிநாடா உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
அர்னாப் புயல் மெல்ல, மெல்ல ஆந்திராவை நெருங்குகிறது. மிக தீவிரப்புயலான அர்னாப் மணிக்கு 18 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. காக்கிநாடாவிற்கு 140 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு 170 கிமீ தொலைவிலும் புயல் உள்ளது. புயல் கரையை கடக்கும் போது 150 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் தீவிரப் புயலாக நிலைகொண்டுள்ள அர்னாப் புயல், மெதுவாக கரையை நோக்கி நகரும் நிலையில் ஆந்திராவின் விசாகப்பட்டினம், காக்கிநாடா உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
அர்னாப் புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயவாடாவுக்கு செல்ல வேண்டிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மறுமார்கத்தில் விசாகப்பட்டினம், விஜயவாடாவில் இருந்து வர வேண்டிய 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் முன் கூட்டியே விமான நிலையை அறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
