எந்த மாற்றமும் இல்லை.. பாகிஸ்தான் அணியை வீழ்த்த இந்த படை போதும்.. டாஸிற்கு பிறகு – கேப்டன் ஹேப்பி

Estimated read time 1 min read

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 17-ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஏற்கனவே நடைபெற்ற முடிந்த முதலாவது லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரை அமர்க்களமாக துவங்கியுள்ளது.

எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி :

அதனை தொடர்ந்து இந்திய அணியானது தங்களது இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக செப்டம்பர் 14-ஆம் தேதியான இன்று துபாய் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு இந்திய அணி செல்ல வேண்டும் என்பதற்காக இந்த போட்டியில் முழுமூச்சுடன் போராடும் என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன்னர் போடப்பட்டு முடிந்த வேளையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான ஆகா சல்மான் டாஸ் வென்று தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி பந்துவீச தயாராகி வருகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றங்கள் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டாசுக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று உறுதி செய்தார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

நாங்கள் இந்த போட்டியின் போது முதலில் பந்து வீசவே விரும்பினோம். அதனால் இந்த டாஸ் முடிவு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதோடு இந்த போட்டியிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்த மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்தால் கூடுதல் சாதகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

முதல் போட்டியில் விளையாடிய அதே அணியை வைத்து நாங்கள் இந்த போட்டியையும் எதிர்கொள்ள இருக்கிறோம் என சூரியகுமார் யாதவ் கூறியுள்ளார். இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக விளையாடிய அதே இந்திய அணியே விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author