சேவை வர்த்தகத்துக்கான 2025ஆம் ஆண்டு சீனச் சர்வதேசப் பொருட்காட்சி நிறைவு பெற்றது பற்றிய செய்தியாளர் கூட்டம் செப்டம்பர் 14ஆம் நாள் நடைபெற்றது.
தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், நடப்புப் பொருட்காட்சியில், சேவை வர்த்தகத்தின் டிஜிட்டல் மயமாக்கம் நுண்ணறிவுமயமாக்கம், பசுமைமயமாக்கம் முதலியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. சுமார் 2000 தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் நேரடியாக பங்கெடுத்தன.
சுமார் 5600 தொழில் நிறுவனங்கள் இணைய வழியாக கலந்து கொண்டன. மேலும், 14ஆம் நாள் 12 மணி வரை, 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இப்பொருட்காட்சியைப் பார்வையிட்டனர்.
கட்டிடம், தகவல் தொழில் நுட்பம், நாணயம் உள்ளிட்ட துறைகளில் 900க்கும் மேலான சாதனைகள் பெறப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.