சீனாவுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கும் இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஸ்விட்சர்லாந்து கூட்டமைப்பின் தலைவர் கரின் கெல்லர்-சுட்டர் ஆகியோர் பரஸ்பர வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
ஷிச்சின்பிங் கூறுகையில், சீன மற்றும் ஸ்விட்சர்லாந்து உறவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றேன். 75ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாக கொண்டு, பொருளாதாரம், வர்த்தகம், நிதி ஒத்துழைப்பு மற்றும் மக்கள் தொடர்பை ஆழமாக்கி, இரு நாடுகளிடையே உள்ள புத்தாக்க நெடுநோக்கு கூட்டாளி உறவை புதிய நிலைக்கு கொண்டு வர விரும்புகின்றேன் என்று தெரிவித்தார்.
கரின் கெல்லர்-சுட்டர் கூறுகையில், சீனாவுடனான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்து ஆழமாக்கவும், இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்புறவை அதிகரிக்கவும் ஸ்விட்சர்லாந்து விரும்புவதாக தெரிவித்தார்.