வெள்ளத் தடுப்பு மற்றும் பேரிடர் மீட்புதவிப் பணிகளை செவ்வனே மேற்கொள்ள சீனா வலியுறுத்தல்

வெள்ளத் தடுப்பு மற்றும் பேரிடர் மீட்புதவிப் பணிகள் குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிலைக்குழு ஜுலை 25ஆம் நாள் கூட்டம் நடத்தி, தொடர்புடைய பணிகளை ஆராய்ந்து முன்னேற்பாடு செய்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டதுக்குத் தலைமை தாங்கி உரைநிகழ்த்தினார்.
ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கான முக்கிய காலக்கட்டம். இக்காலத்தில், மக்களின் உயிர் பாதுகாப்பை முதன்மையாகக் கொள்ள வேண்டும். கண்காணிப்பு வழிமுறையை முழுமைப்படுத்தி, முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளின் துல்லியத்தன்மையை மேம்படுத்த வேண்டும். இயன்றளவில் மக்களின் உயிர் இழப்பு மற்றும் காயங்களைக் குறைக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், அபாயங்கள் நீக்கம் மற்றும் பேரிடர் மீட்புதவி உள்ளிட்ட பணிகளை முழு மூச்சுடன் மேற்கொள்ள வேண்டும். நீர் சேமிப்பு, மின் ஆற்றல், போக்குவரத்து, தொலைத் தொடர்பு ஆகிய பாதிக்கப்பட்ட அடிப்படை வசதிகளை கூடிய விரைவில் மறுசீரமைக்க வேண்டும். வேளாண் துறையில் பேரிடர் தடுப்பு மற்றும் இழப்புகளைக் குறைத்தல் உள்ளிட்டவற்றைச் செவ்வனே மேற்கொண்டு, நாட்டின் தானிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author