கிரேக்கத்தில் 20ஆம் நாள் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவருக்கான தேர்தலில், ஜிம்பாப்வேயைச் சேர்ந்த 41 வயதான கிரிஸ்டி கோவென்ட்ரி இக்கமிட்டியின் 10ஆவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் வரலாற்றில் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் தலைவர் மற்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு வெளியே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது தலைவர் என்னும் வரலாற்றுப் பெருமையைக் கிரிஸ்டி படைத்துள்ளார்.
கிரிஸ்டி கோவென்ட்ரி ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்கள் உள்ளிட்ட 7 பதக்கங்களை வென்றவராவார். ஜூன் மாதம் 24ஆம் நாள் அவர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்கவுள்ளார்.