ஜப்பான் ஸ்குவாஷ் ஓபன் டென்னிஸ் தொடரில், இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பா, எகிப்தின் ஹயா அலியை எதிர்கொண்டார்.
இதில் ஜோஷ்னா சின்னப்பா 11-5, 11-9, 6-11, 11-8 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார். சாம்பியன் பட்டம் வென்ற ஜோஷ்னா சின்னப்பாவுக்கு 15 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.