சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், 23ம் நாள் மாலை, சின்ஜியாங்கின் பல்வேறு இனங்கள் மற்றும் வட்டாரங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.
கட்சியின் மத்திய கமிட்டியின் சார்பில் அவர், சின்ஜியாங்கின் பல்வேறு இன மக்களுக்கு மனமார்ந்த வணக்கம் மற்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அனைவரும் மனம் ஒருமித்து முன்னேறி, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தின் போக்கில் அழகிய சின்ஜியாங்கைச் சிறப்பாகக் கட்டியமைக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.