மதுரை அக் 15
மதுரையில், தூய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வெள்ளத்தில் தேர் பவனி நடைபெற்றது. மதுரை, டவுன்ஹால் ரோடு தூய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கடந்த அக் 4ம் தேதி கொடியேற்றத் துடன் துவங்கியது. உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி ஆலய வளாகத்தில் கொடியேற்றி சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார் இதையடுத்து தினம் தோறும் மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை வழிபாடு நடைபெற்றது.
இதன் தொடர்ச்சி யாக திருப்பலிக்கு பின் நற்கருணை பவனி நடைபெற்றது. நேற்று மாலை திருவிழா சிறப்பு திருப்பலியை தொடர்ந்து,
தேர் பவனி நடைபெற்றது. ஆலயத்திலிருந்து புறப்பட்ட தேர், முக்கிய தெருக்கள் வழியாக பவனி வந்தது. வழி நெடுகிலும் திரளான மக்கள் வழி மறையுறை பாடு நடத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருப்பலியில் குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்வு நடந்தது. இதனை மதுரை உயர் மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோணி மஸ் நிறைவேற்றி வைத்தார்.
விழா ஏற்பாடுகளை பங்குத் தந்தையும் தெற்கு மறை வட்ட அதிபருமான அமல்ராஜ் மற்றும் உதவி பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ தலைமையில் பங்கு அருட்பணிப் பேரவையினர், பக்த சபையினர் செய்திருந்தனர்.
தேர் பவனியை தொடர்ந்து, கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது.