தெலங்கான மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் அறுவடைச் செய்து கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் சேதமடைந்தன.
தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து வாரங்கல் மாவட்டத்தின் மாரி மிட்டா மற்றும் பூபதி பேட்டா கிராமங்களில் பெய்த கனமழையால் அறுவடைச் செய்து கொள்முதலுக்காகக் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல், சோளப்பயிர்கள் நனைந்து சேதமாகின.
இதேபோல் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்திலும் கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதனால் நெற்பயிர்கள் நனைந்து சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் உரிய நேரத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு, பயிர்களை கொள்முதல் செய்யாததே அவல நிலைக்குக் காரணமென விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.