சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜெர்மன் தலைமை அமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸுடன் 16ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இவ்வாண்டு, சீனாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான விரிவான தொலைநோக்குக் கூட்டாளியுறவு உருவாக்கப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 10 ஆண்டுகளில், இரு நாட்டுறவு சீராக வளர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளில் மேம்பட்டு வரும் ஒத்துழைப்பு, தத்தமது வளர்ச்சிக்கு உந்து சக்தியை கொண்டு வருகிறது என்று ஷிச்சின்பிங் குறிப்பிடார்.
சீனாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே அடிப்படையிலான நலன் முரண்பாடு இல்லை என்றும், ஒன்றுக்கு ஒன்று பாதுகாப்பு அச்சுற்றுதலை ஏற்படுத்தாது என்றும் அவர் மேலும் கூறினார்.
சீன-ஜெர்மனி ஒத்துழைப்பு, இரு தரப்புக்கும் மட்டுமல்லாமல், உலகிற்கும் பயன் அளிக்கும். சீனா மற்றும் ஜெர்மனிக்கு இடையே பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பு, அபாயம் இல்லை. மாறாக, இரு தரப்புறவின் சீரான வளர்ச்சிக்கு காப்புறுதியாகவும், எதிர்காலத்தை திறக்கும் வாய்ப்பாகவும் திகழ்கிறது என்றும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
ஓலாஃப ஷோல்ஸ் பேச்சுவார்த்தையில் கூறுகையில்,
சீனாவுடன் இணைந்து இரு நாட்டுறவை பலப்படுத்தி, பல்வேறு துறைகளில் இரு தரப்பு பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்கப் பணியாற்றும் ஜெர்மனி, கல்வி, பண்பாடு ஆகிய துறைகளில் பரிமாற்றங்களை முன்னெடுத்துச் செல்லும்.
இதுவே, ஜெர்மனி மற்றும் சீனாவுக்கும் உலகிற்கும் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்தார்.
14ஆம் நாள் முதல் தனது சீனப் பயணத்தை தொடங்கிய ஷோல்ஸு அடுத்தடுத்து சொங்ச்சிங், ஷாங்காய், பெய்ஜிங் ஆகிய மாநகரங்களுக்கு சென்று தொழில் நிறுவனங்களைப் பார்வையிட்டார்.
2021ஆம் ஆண்டு ஜெர்மனி தலைமை அமைச்சராகப் பதவியேற்ற பிறகு ஷோல்ஸ் சீனாவில் 2ஆவது முறைப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.