சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு பிப்ரவரி 28ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது.
இதில், சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடரில் பரிசீலனைக்காக சீன அரசவை ஒப்படைக்கப்படும் சீன அரசுப் பணி அறிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
கடந்த ஆண்டில் ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி, முழு கட்சியையும், அனைத்து தேசிய இன மக்களையும் ஒன்றிணைத்து, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் முக்கிய குறிக்கோள்களையும் பணிகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.