சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரேதசம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நடவடிக்கையில் கலந்துகொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சி சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் கமிட்டி மற்றும் சின்ஜியாங் அரசின் பணியறிக்கையைக் கேட்டறிந்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
புதிய யுகத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக அமைப்பு முறையை சின்ஜியாங் முழுமையாகவும் சீராகவும் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். வளர்ச்சியையும் பாதுகாப்பையும் ஒன்றிணைத்து, சமூக நிதானம் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கில் ஊன்றி நின்று, ஒன்றிணைப்பு, நல்லிணக்கம், செழுமை, நாகரிகம், சீரான சுற்றுச்சூழல் ஆகியவற்றைக் கொண்ட சின்ஜியாங்கைக் கட்டியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.