தமிழக அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்.
தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார். கொரோனா காலத்தில் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியவர். கடந்த 2 மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.
இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ் தாஸ் எனும் இந்தியக் காவல் பணி அதிகாரியை காதலித்து 1992ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிங்கி, பிரீத்தி என இரண்டு மகள்கள் உள்ளனர்.