சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், 24ஆம் நாள் காலை, சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு பற்றிய கண்காட்சியைப் பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
கடந்த 70 ஆண்டுகளில் சின்ஜியாங்கில் நிகழ்ந்த மாபெரும் முன்னேற்றங்கள், சீனாவின் மாதிரியாக திகழ்கின்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சி நிர்ணயித்த சிறுப்பான்மை தேசிய இன தன்னாட்சி அமைப்பு முறை மிக சரியானது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. புதிய யுகத்தில் சின்ஜியாங் பற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகம் பயன் மிக்கது. புதிய நிலைமைக்கிணங்க, இந்த அமைப்பு முறையைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
