சீனாவின்சென்சௌ 20 எனும் விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் செப்டம்பர் 26ஆம் நாள்
அதிகாலையில் 4ஆவது முறையாக விண்கலத்திலிருந்து வெளியே வந்து பணி மேற்கொண்டர். 6மணி
நேரங்களில் சென் ட்சின்ரெய், வாங்ச்சியே ஆகிய விண்வெளி வீரர்கள், விண்வெளி
குப்பைகளைத் தடுக்கும் உபகரணங்களைப் பொருத்தல், விண்கலத்தின் வெளிப்புற
சாதனங்களுக்கான சோதனை முதலிய கடமைகளை நிறைவேற்றினர்.
சீனாவின்
3ஆவது விண்வெளி வீரர்கள் குழு விண்வெளியே கடமைகளை மேற்கொள்வது இதுவே
முதன்முறையாகும்.
தற்போது
சென்சௌ 20 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் குழு விண்வெளியில் 150நாட்களாகத்
தங்கியுள்ளனர்.