சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், அமெரிக்காவின்நட்புக் குழுக்களுடன் செப்டம்பர் 25ஆம் நாள்
நியூயார்கில் கலந்துரையாடல் கூட்டம்
நடத்தினார்.
அப்போது
லீ ச்சியாங் கூறுகையில், சீன-அமெரிக்க உறவு, உலகளவில் மிக முக்கிய இரு
தரப்புறவாகும். இரு நாடுகள் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, ஒத்துழைப்புகளின் மூலம்
கூட்டு வெற்றி பெற வேண்டும் என்றார்.
மேலும்,
பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவு, இரு நாட்டுறவின் ஒரு முக்கிய பகுதியாகும். இரு
தரப்பும் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, பரஸ்பர நலன்
தந்து கூட்டு வெற்றி பெறுவது, முழு உலகத்துக்கும் நன்மை புரியும். பொருளாதாரத்தின்
சீரான வளர்ச்சியை நிலைநிறுத்தி, அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு
நாடுகளின் தொழில் நிறுவனங்களுக்கு மேலதிக வாய்ப்புகளை சீனா வழங்கும் என நம்பிக்கை
கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்
பங்கெடுத்த அமெரிக்கத் தரப்பினர் கூறுகையில், அமெரிக்காவும் சீனாவும் பல்வேறு
துறைகளில் பேச்சுவார்த்தைகளை விரிவுபடுத்தி, பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்புகளை
வலுப்படுத்தி, மானுடவியல் பரிமாற்றத்தை நெருக்கமாக்க
வேண்டும் என்றும், நீண்டகால மற்றும் நிதானமான இரு நாட்டுறவை வளர்த்து, சர்வதேச
சமூகத்துக்கு மேலதிக உறுதித்தன்மையை ஊட்ட விரும்புவதாகவும் தெரிவித்தனர்.