ஒரு நாடு ஒரு முன்னுரிமை உற்பத்திப் பொருள் முன்மொழிவு என்ற உலகளாவிய நிகழ்ச்சி பற்றிய ஆய்வுக் கூட்டம் ஜூலை 8முதல் 10ஆம் நாள் வரை இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றது.
ஐ.நா உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு—சீன தெற்கு-தெற்கு ஒத்துழைப்புத் திட்டத்தின் ஆதரவுடன் இம்மொழிவு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 15 நாடுகளைச் சேர்ந்த தொடர்புடைய பொறுப்பாளர்கள் ஒன்றுகூடி இம்முன்மொழிவின் நடைமுறையாக்க திட்டம் குறித்து அனுபவங்களைப் பரிமாறிக் கொண்டனர்.
பல்வேறு நாடுகள் தங்கள் தனிச்சிறப்பு வாய்ந்த வேளாண் உற்பத்திப் பொருட்களின் சாதகத்தைப் பயன்படுத்தி சந்தை வாய்ப்புகளை வெளிக்கொணர்வதற்கு உதவியளிப்பதோடு, உள்ளூர் உணவுப் பண்பாடு மற்றும் வேளாண்மை மரபு செல்வங்களையும் பாதுகாப்பது அதன் நோக்கமாகும்.
வங்காளத்தேசத்தின் பலாப்பழம், உஸ்பெக்ஸ்தானின் இனிப்பு செர்ரி உள்ளிட்ட 95நாடுகளைச் சேர்ந்த 56 வகை வேளாண் உற்பத்திப் பொருட்கள் இதில் அடங்கும். ஐ.நா உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு—சீன தெற்கு-தெற்கு ஒத்துழைப்புத் திட்டம் மூலம், இம்முன்மொழிவுக்கு 50லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவியைச் சீனா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.