ஏப்ரல் 13 அன்று ஈரான், இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவி ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பிறகு, இஸ்ரேலும், அமெரிக்காவும், ஈரானிடமிருந்து இந்த வார இறுதியில் மற்றுமொரு தாக்குதலை எதிர்பார்த்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளிடமிருந்து பதில் தாக்குதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கப் பணியாளர்களைப் பாதுகாக்கவும் இஸ்ரேலைப் பாதுகாக்கவும் அமெரிக்கா ஏற்கனவே கூடுதல் போர்க்கப்பல்களையும் போர் விமானங்களையும் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் ஒரு அறிக்கை கூறுகிறது.
இந்த வார இறுதியில் ஈரான் இஸ்ரேலைத் தாக்கப் போகிறது என்று ஜோ பைடன் நிர்வாகம் உறுதியாக நம்புகிறது என்று அறிக்கை கூறுகிறது.