கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
காடுகளிலுள்ள ராட்சத பாண்டாக்களின் மொத்த எண்ணிக்கை கடந்த 80ம் ஆண்டுகளின் துவக்கத்தில் இருந்து சுமார் 1,100 இலிருந்து ஏறக்குறைய 1,900 ஆக அதிகரித்துள்ளது என்று சீனத் தேசிய வனத்தொழில் மற்றும் புல்வெளிபணியகத்திலிருந்து கிடைத்த தகவல் கூறுகின்றது.
அண்மையில், வனக்கொள்கை மற்றும் விதி அமைப்புமுறையைச் சீனா தொடர்ந்து மேம்படுத்தி, நிதி முதலீட்டை அதிகரித்து வருகின்றது என்று இப்பணியகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
அடுத்து, வனவிலங்கு மற்றும் தாவரங்களின் பாதுகாப்புத் திட்டம் குறித்த சிறப்பு ஆராய்ச்சியை இப்பணியகம் மேற்கொள்கின்றது.
இயற்கை பாதுகாப்பு இடங்களின் அமைப்பு, தேசிய தாவரவியல் பூங்கா அமைப்பு முக்கிய இனங்கள் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மைய அமைப்பு ஆகியவற்றின் கட்டுமானத்தை முன்னேற்றி, மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கமான சகவாழ்வின் நவீனமயமாக்கலை இது ஊக்குவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.