உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணக்கீட்டை உலக வங்கி குறைத்தல்

2025ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணக்கீட்டை இவ்வாண்டின் ஜனவரியில் வெளியிட்ட 2.7விழுக்காட்டிலிருந்து தற்போது 2.3விழுக்காடாகக் குறைத்துள்ளதாக உலக வங்கி 10ஆம் நாள் வெளியிட்ட உலகப் பொருளாதார முன்னாய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வர்த்தக தடை மற்றும் உறுதியற்ற உலக கொள்கைச் சூழலால், உலகப் பொருளாதார வளர்ச்சி தணிவடைந்து வருகிறது. கொந்தளிப்பில் மீண்டும் சிக்கிக்கொண்டு வருகிறது.   இவ்வாண்டு, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் 1.2விழுக்காடு வரை அதிகரிக்கும்.

இது முந்தைய கணக்கீட்டை விட, 0.5விழுக்காடு குறைவாகும். புதிதாக வளரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரம் 3.8விழுக்காடு வரை அதிகரிக்கும் என்றும், இது முந்தைய கணக்கீட்டை விட, 0.3விழுக்காடு குறைவு என இவ்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளன.

 

Please follow and like us:

You May Also Like

More From Author