ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 வது அமர்வில் (UNGA) இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்தார்.
பாகிஸ்தானின் பெயர் குறிப்பிடாமல், பயங்கரவாதத்தை வெளிப்படையாகத் தனது அரசின் கொள்கையாக அறிவித்துள்ள ஒரே நாடு அதுதான் என்று அவர் சாடினார்.
உலகளாவிய சமூகம் ஒன்றிணைந்துள்ள நிலையில், இந்த ஒரே ஒரு நாடு மட்டும் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவளித்து, அவர்களுக்கு நிதி வழங்கி, ஆயுதம் அளித்து, பயிற்சி அளித்து வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் சர்வதேச அரங்கில் பாதுகாக்கப்படுவதாகக் கூறிய அவர், ஐநாவின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறுவோருக்கு எதிராக ஐநா சபை வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக அறிவித்த ஒரே நாடு; பாகிஸ்தானை பங்கம் பண்ணிய ஜெய்சங்கர்
