சீனப் பொருட்கள் மீது 50 விழுக்காட்டு கூடுதல் சுங்கவரியை அமெரிக்கா ஏப்ரல் 7ஆம் நாள் விதித்தது. இதற்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து, சொந்த நலன்களைப் பேணிக்காக்கும் வகையில், தடை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 8ஆம் நாள் தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் கூறும் போது, தவறான செயல்களை உடனடியாக சரிசெய்து, சீனப் பொருட்கள் மீதான ஒருசார்பு சுங்கவரி நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்து, சீனா மீதான பொருளாதார மற்றும் வர்த்தக அடக்குமுறைகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும். ஒன்றுக்கு ஒன்று மரியாதை அடிப்படையில் சமமான பேச்சுவார்த்தையின் மூலம் சீனாவுடனான கருத்து வேற்றுமைகளைப் பயனுள்ள முறையில் தீர்க்குமாறு சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது என்றார்.