கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தையடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைமை உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குப் பெரும் நிதியுதவியை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை ஞாயிற்றுற்கிழமை (செப்டம்பர் 28) வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தச் சோகச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மொத்தமாக ரூ.1 கோடி நிவாரணத் தொகை பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தப் பெரும் நிதியுதவி, உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் கணிசமான ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரூரில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
