லக்சம்பர்க்புதிய கிராண்ட் டியூக்
ஆக பதவி ஏற்ற வில்லியம் குய்லூமுக்கு
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 3ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-லக்சம்பர்க் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட கடந்த 50க்கும்
மேலான ஆண்டுகளாக, இரு நாடுகள் எப்போதுமே ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, சமத்துவ முறையில்
செயல்பட்டு வருகின்றன. தற்போது, இரும்புருக்கு, நாணயம், சரக்குப் போக்குவரத்து
உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் செழுமையான சாதனைகளைப் பெற்றுள்ளன என்றார்
மேலும், இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருவதாகக்
குறிப்பிட்ட ஷிச்சின்பிங், கிராண்ட் டியூக்குடன் இணைந்து, சீன-லக்சம்பர்க் உறவை புதிய
கட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்று இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்க
விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேநாள்,
லக்சம்பர்க்கின் முன்னாள் கிராண்ட் டியூக்கான ஹென்றிக்கு ஷி ச்சின்பிங்
வணக்கத்தையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.