இஸ்ரேல் விமானப்படை ஆகஸ்ட் 10ஆம் நாள் காசா பகுதியிலுள்ள ஒரு பள்ளியின் மீது நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் 12ஆம் நாள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இஸ்ரேலின் தாக்குதலால் காசா பகுதியில் ஏற்பட்ட மக்களின் உயிரிழப்பு கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
அவர் மேலும் கூறுகையில், மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் சீனா கண்டிக்கின்றது. சர்வதேச மனித நேயச் சட்டத்தை மீறும் எந்தவொரு செயல்களையும் எதிர்க்கிறது என்றார்.
மேலும், சர்வதேச சமூகத்தின் குரல்களை இஸ்ரேல் கவனமாகக் கேட்டு, போரை உடனடியாக நிறுத்த வேண்டும். மக்களை முழுமையாக பாதுகாக்க வேண்டும். பிராந்தியத்தில் பதற்றமான நிலைமையை மேலும் தீவிரமாக்குவதற்குச் சீனா வன்மையான கண்டனம் தெரிவிக்கின்றது என்றார்.