அடுத்த வாரம் துவங்கவுள்ள 7ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் உலகின் 500 முன்னணி நிறுவனங்களிலுள்ள 297 நிறுனங்களும், உலக நாடுகளைச் சேர்ந்த சுமார் 800 கொள்முதல் குழுக்குளும் பங்கேற்கின்றன. இந்த பதிவு வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்
சீனச் சந்தையின் ஈர்ப்பாற்றலையும், சீனப் பொருளாதார எதிர்காலம் மீது சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையும் இந்த புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன என்று குறிப்பிட்டார்.
சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியை வாய்ப்பாக பயன்படுத்தி, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து ஒத்துழைப்பை விரிவாக்கி, சீனாவின் பெரிய சந்தை வாய்ப்பைப் பகிர விரும்புகிறது என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.