டமால் டுமீல் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு – தமிழ்நாடு வெதர்மேன் மழை அப்டேட்…!

Estimated read time 1 min read

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், வேலூரில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த காட்சிகளை செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

இம்மாவட்டத்தில் மையம் கொண்ட மேகக் கூட்டங்கள் படிப்படியாக நகர்ந்து KTCC எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வருகிறது. அடுத்த 2 மணி நேரத்தில் சென்னையின் மேற்கு எல்லைப் பகுதியை நெருங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய தினம் சென்னையில் மிகவும் அற்புதமான வானிலை இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் இருப்பதை பார்க்கலாம்.

அடுத்த 3 நாட்கள்: வட தமிழகத்தில் டமால் டுமீல் என இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக சென்னையில் நல்ல மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் மாதத்தின் 2ஆம் பாதி: வட தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் வானிலை மிகவும் சிறப்பாக இருக்கும் என மழைக்கான வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

You May Also Like

More From Author