இந்தியா-ரஷ்யா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, புத்தரின் புனிதச் சின்னங்கள் ரஷ்யாவின் கல்மியா குடியரசின் தலைநகரான எலிஸ்டாவை சென்றடைந்துள்ளன.
பொதுவாக புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சின்னங்கள், உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா தலைமையிலான உயர்மட்ட இந்தியக் குழுவுடன், இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டன.
புனித கலைப்பொருட்களை, கல்மியா குடியரசின் தலைவர் பட்டு செர்ஜேயெவிச் காசிகோவ் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் மிகுந்த பக்தியுடன் வரவேற்றனர்.
ஐரோப்பாவின் ஒரே பூர்வீக பௌத்த மக்கள் வசிக்கும் பகுதியான கல்மியாவில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமான சாக்யமுனி புத்தரின் பொன் அடைக்கலம் என்ற மடாலயத்தில் அக்டோபர் 18 வரை இந்தச் சின்னங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
இந்தியா-ரஷ்யா கலாச்சார உறவுகளில் புதிய மைல்கல்; புத்தரின் புனிதச் சின்னங்கள் கல்மியாவுக்கு அனுப்பப்பட்டது
