கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க சார்பில் மாபெறும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர், அங்கிருந்து கன்னியாகுமரியில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்தார்.
அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்ட மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாஜகவினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
இந்த கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசுகையில், இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை ஒரே ஒரு போன் மூலம் அவர்களது உயிரை காப்பாற்றியவர் பிரதமர் மோடி. இதுவரை தமிழக மீனவர்கள் ஏராளமானவர்களின் உயிரை காப்பாற்றியவர்தான் நமது பிரதமர் மோடி
மீனவர்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரே அரசு பாஜக அரசு மட்டுமே. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் ஒரு துப்பாக்கிச் சூடு கூட நடைபெறவில்லை என்றார்.
தொடர்ந்து பேசியவர், நாடும் நாட்டு மக்களும் நலம் பெற வேண்டும் எனில் மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வெற்றி பெறவேண்டும். அவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் பொது மக்கள் உறுதியுடன் உள்ளனர். எனவே, மக்களின் ஆசையை நாம் பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்.