உக்ரைனுடன் அமைதி பேச்சை நிறுத்தியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.
ஆனால் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. இதனிடையே ரஷ்யா, உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையும் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் 3 சுற்றுகளாக நடைபெற்றது.
ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் உக்ரைனுடனான அமைதிப் பேச்சு நிறுத்தப்பட்டுள்ளது என்று ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அமைதிப் பேச்சுவார்த்தைப் பணிகள் உடனடியாகப் பலன் தரும் என எதிர்பார்க்க முடியாது என்றார்.