வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Estimated read time 0 min read

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் ரசாயன கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது.

பின்னர்த் தீ மளமளவெனப் பரவி அருகில் இருந்த ஆடைத் தொழிற்சாலையிலும் பற்றியது. பல மணி நேர போராட்டத்துக்குப் பின், தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். ஆடைத் தொழிற்சாலையின் முதல் மற்றும் இரண்டாவது மாடிகளில் இருந்து 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவர்கள் அனைவரும் நச்சு வாயுவைச் சுவாசித்ததால் மயக்கமடைந்தபோது தீ விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You May Also Like

More From Author