138வது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதிபொருட்காட்சி அக்டோபர் 15ம் நாள் சீனாவின் குவாங் ச்சோ நகரில் துவங்கியது. இதில்
பங்கெடுத்த 32 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் சுமார் 3600 தொழில் நிறுவனங்கள்
முதன்முறையாக இதில் பங்கேற்று வருகின்றன.
நடப்பு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி,
முன்பைப் போல 3 கட்டங்களாக நடைபெறுகிறது. ஒவ்வொரு கட்டப் பொருட்காட்சி 5 நாட்கள்
நீடிக்கும். முதல் கட்டப் பொருட்காட்சியின் தலைப்பு, முன்னேறிய தயாரிப்புத் துறை
ஆகும் என்று தெரிய வந்துள்ளது.
நடப்பு பொருட்காட்சிக்கு 2.4 இலட்சம் கொள்வனவு
வணிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஒரு
மண்டலம் மற்றும் ஒரு பாதை கூட்டு முன்னெடுப்பில் பங்கேற்ற நாடுகள் முதலியவற்றைச்
சேர்ந்த வணிகர்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்துள்ளது என்று தரவுகள்
காட்டுகின்றன.
சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி,
சீனாவிலுள்ள வெளிநாட்டு வர்த்தகத்தின் போக்கைக் காட்டும் சின்னமாகவும், உலகளாவிய
வர்த்தகப் பொருட்காட்சியாகவும் திகழ்கிறது. சேவை இயந்திர மனிதன் அரங்கு, நுண்ணறிவு
மருத்துவ அரங்கு ஆகியவை அதிக கவனம் ஈர்த்துள்ள பகுதிகளாகும் என்பது
குறிப்பிடத்தக்கது.