வரும் மார்ச் 3 அன்று நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சுமார் 10 மணி நேரம் அடைக்கப்பட உள்ளதாக TTD அறிவித்துள்ளது.
மார்ச் 3-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை நடை அடைக்கப்பட்டிருக்கும்.
அன்றைய தினம் மதியம் சந்திர கிரகணம் நிகழ்வதால், ஆகம விதிகளின்படி கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பே கோயில் நடை அடைக்கப்படுவது வழக்கமாகும்.
அன்றைய தினம் வழங்கப்பட வேண்டிய ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் தர்ம தரிசனம் (Sarva Darshan) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
கல்யாணோத்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் போன்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி போறீங்களா? மார்ச் 3ஆம் தேதி 10 மணி நேரம் நடை அடைப்பு
