செசல் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேட்ரிக் ஹெர்மினியேவுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்அக்டோபர் 15ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், சீனாவும் செசலும் தத்தமது மைய
நலன்களுடன் தொடர்புடைய மற்றும் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகளில் ஒன்றுக்கொன்று
ஆதரவு அளித்து, அடிப்படை உள்கட்டமைப்பு, பசுமை வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் பெரும்
சாதனைகளைப் பெற்றன என்றார். மேலும், சீன-செசல் உறவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
அளித்து வருகிறேன். அரசுத் தலைவர் ஹெர்மினியேவுடன் இணைந்து சீன-ஆப்பிரிக்க
ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாட்டில் பெறப்பட்டுள்ள சாதனைகளைச்
செயல்படுத்துவதை வாய்ப்பாக கொண்டு, இரு நாட்டு நெடுநோக்கு கூட்டாளி உறவை புதிய கட்டத்தில்
முன்னேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.