தமிழகத்தில் கனமழை தொடர்கிறது: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  

Estimated read time 0 min read

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் வடகிழக்குப் பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருவதால், சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த மழையின் தாக்கம் காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், கனமழை பெய்து வரும் 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 16, 2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

You May Also Like

More From Author