சர்வதேச சதுப்புநில மையத்தின் முதலாவது செயற்குழு கூட்டம் மற்றும் திறப்பு விழா சீனாவின் ஷென்ஜென் மாநகரில் நடைபெற்றது. இதுவரை 8 உறுப்பு நாடுகளையும் 13 கையெழுத்திட்ட நாடுகளையும் கொண்ட இந்த மையம், ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் உள்ள சதுப்புநிலம் காணப்படும் உலகளாவிய முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
சர்வதேச சதுப்புநில மையத்தின் கட்டுமானத்தை ஊக்குவிப்பதில் சீனாவின் முக்கிய பங்கை, சதுப்புநிலங்களைக் காப்பதற்கான உடன்படிக்கையின் செயலகம் பெரிதும் பாராட்டியது. மேலும், சதுப்புநிலங்களைக் காப்பதற்கான உடன்படிக்கை கட்டமைப்பின் கீழ் தனித்துவமான முக்கியத்துவம் வாய்ந்த இம்மையம், அனைத்து தரப்புகளும் கொள்கை பரிமாற்றம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, அனுபவம் பகிர்ந்து கொள்வது ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கும், உலகளாவிய சதுப்புநில பாதுகாப்பு, மறுசீரமைப்பு மற்றும் தொடரவல்ல பயன்பாட்டிற்கும் முக்கிய மேடையை வழங்கும் என்று கையெழுத்திட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
