ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரின் பின்னணியில் மாஸ்கோவை தனிமைப்படுத்தும் முயற்சியில் இது ஒரு “பெரிய படி” என்றும் அவர் கூறினார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ரஷ்யாவின் கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்வது குறித்து பிரதமர் மோடியிடம் தான் கவலை தெரிவித்ததாகவும், இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் போருக்கு நிதியளிக்க உதவும் என்று வாஷிங்டன் கருதுவதாகவும் டிரம்ப் அவரிடம் தெரிவித்ததாக கூறினார்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் தகவல்
