கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் , விழுப்புரம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (22-10-2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
