இவ்வாண்டு ஜுன் திங்கள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பதவியை ஏற்ற பின்னர், கெர்ஸ்டி கொவன்ட்ரி அம்மையார் முதன்முறையாக சீனாவில் பயணம் மேற்கொண்டு, 15வது தேசிய விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் சீன ஊடகக் குழுமத்துக்கு பேட்டியளிக்கையில், குவாங்டுங், ஹாங்காங், மக்கௌ ஆகிய 3 இடங்கள் இணைந்து, இப்போட்டியை நடத்துவது, முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குவாங்டுங்-ஹாங்காங்-மக்கௌ பொருளாதாரம், ஆஸ்திரேலியாவைத் தாண்டியுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இப்பிரதேசத்துக்கு வகுத்த திட்டங்கள் பாராட்டத்தக்கவை. விளையாட்டுத் துறையின் வளர்ச்சி, இத்திட்டங்களில் இடம்பெறுகிறது. விளையாட்டில் முதலீடு செய்வது, சமூகத்தில் முதலீடு செய்வதாகும். தேசிய மக்களின் ஆரோக்கியம், உயிராற்றல் மிக்க சமூகத்தை உருவாக்கும். ஷிச்சின்பிங் போன்று, விளையாட்டுத் துறையில் அதிக கவனம் செலுத்தும் தலைவர், உலகளவில் அதிகமில்லை என்று தெரிவித்தார்.
