இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் இணையும் இந்தப் படம், இவர்கள் இணைந்து பணியாற்றும் முதல் முழு நீளத் திரைப்படமாகும்.
முன்னதாக, வெங்கட் பிரபு இயக்கிய ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) படத்தில் சிவகார்த்திகேயன் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
அந்த படத்தில் விஜய் கதாநாயகனாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
இந்தப் புதிய படத்தில் இரண்டு முக்கிய பெண் கதாபாத்திரங்கள் இருப்பதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்திற்காக கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் மற்றொரு கதாபாத்திரத்திற்காக காயத்ரி ஷங்கர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்?
